'டப்பா டிரேடிங்' மோசடிகள் என்.எஸ்.இ., எச்சரிக்கை
'டப்பா டிரேடிங்' மோசடிகள் குறித்து தேசிய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பங்கு சந்தைகளில், பங்குகளை வாங்கி விற்பது போல் இல்லாமல், பங்குகளின் விலை ஏற்ற, இறக்கங்களை மட்டும் வைத்து பந்தயம் கட்டி சூதாடுவதுதான் டப்பா டிரேடிங். எல்லா பரிவர்த்தனைகளுமே ரொக்கத்தில் நடக்கும்.
எனவே, இதுபோன்ற சட்டவிரோதமான வர்த்தக முறை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதலீட்டாளர்களுக்கு தேசிய பங்கு சந்தை கேட்டுக்கொண்டுள்ளது.
எச்சரிக்கை அவசியம்
* உறுதியான லாபம் கிடைக்கும் என கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி, முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
* அதிக ரிஸ்க் என்பதுடன், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு
*நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது ஏமாற்றப்பட்டாலோ, செபி அல்லது பங்கு சந்தையிடம் புகார் அளிக்க முடியாது; பணம் முழுமையாக பறிபோகும் அபாயம் உள்ளது.
செய்ய வேண்டியவை
* பங்கு சந்தையில் யாராலும் 'உறுதியான லாபத்தை' வழங்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
* சமூக வலைதள குழுக்களில் வரும் 'டிரேடிங் டிப்ஸ்'களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
மேலும்
-
நேரடி வரி வசூல் ரூ.23.40 லட்சம் கோடியாக அதிகரிப்பு
-
ஆண்டிபட்டியில் தம்பியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற அண்ணன்
-
மன்னராட்சிக்கு மக்கள் முடிவு: ஆதவ் அர்ஜுனா உற்சாகம்
-
சசிகலா வேட்பாளரால் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்வி
-
பிரதான கட்சிகள் வழங்கிய பணத்தை வாங்கி தம் விருப்பப்படியே ஓட்டளித்த வாக்காளர்கள்
-
திமுகவில் ஓரம் கட்டப்பட்ட வி.எஸ்.பாபு முதல்வரை எதிர்த்து வெற்றி