முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வு
கடந்த வார பங்குச்சந்தை வர்த்தகத்தில், 'டாப் - 10' நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2.20 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதில், கிட்டத்தட்ட 1.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு உயர்வுடன் 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 'பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., பஜாஜ் பைனான்ஸ்' ஆகிய நிறுவனங்கள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.

அதேநேரத்தில், 'ஹெச்.டி.எப்.சி., பேங்க், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எல் அண்டு டி., ஹிந்துஸ்தான் யூனிலீவர், எல்.ஐ.சி.,' ஆகிய 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு மொத்தமாக 1.24 லட்சம் கோடி ரூபாய் சரிந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement