போலீஸ் செய்திகள்
தீ விபத்தில் முதியவர் பலிதேனி: க.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுருளி 71. இவர் வீட்டில் ஒயர் கட்டிலில் படுத்து துாங்கினார். அப்போது அவர் பீடி புகைத்த போது போர்வையில் தீப்பற்றியது. இதில் சுருளி உடலில் தீக்காயம் ஏற்பட்டன. அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் அனுமதித்து சிகிச்கை பலன் இன்றி உயிரிழந்தார். உத்தமபாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் செயின் பறிப்புதேனி: ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரை சேர்ந்தவர் மகாலட்சுமி 24. இவர் சித்தையகவுண்டன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்பகுதி ரோட்டில் நடந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி சென்றார். மகாலட்சுமி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்தேனி: அணைக்கரைபட்டியை சேர்ந்தவர் நதியா 23. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. நதியாவுக்கும் அவரது கணவர் கார்த்திஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டிபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு நதியா, குழந்தைகளுடன் வெளியே சென்றார். வீடு திரும்பவில்லை. தாய் ஜெபமணி புகாரில் போடி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலைதேனி: காமராஜபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி சகுந்தலா 42. இவருக்கும் கணவர் கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணேசன் வேலைக்கு சென்ற நிலையில் சகுந்தலா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சென்னைக்கு .... மெயின் செய்திக்கு இணைப்பு
-
உளுந்துார்பேட்டை தொகுதியில் தி.மு.க., – அ.தி.மு.க., க்கு இறுதி வரை கடும் போட்டி
-
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதால் உளுந்துார்பேட்டை முடிவு தாமதம்
-
வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி இல்லை தே.மு.தி.க., தொண்டர்கள் வாட்டம்
-
பிரேமலதாவுக்கு தேர்தலில் முதல் வெற்றி இறுதிவரை இழுபறியால் திக்..திக்..
-
திண்டிவனம் (தனி) தொகுதி வி.சி., வெற்றி