‘விவிபேட்’ சீட்டுகளை எண்ணி முடிவு அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில், 321 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், குருவிமலை பகுதியில் உள்ள 153 எண் உடைய ஓட்டுச்சாவடியில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டப்பதிவு இயந்திரம், ஓட்டுப்பதிவின்போது பழுதானது.

அப்போது, அதற்கு பதிலாக இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு இயந்திரத்தில் 670 ஓட்டுகளும், மற்றொரு இயந்திரத்தில் வெறும் இரண்டு ஓட்டுகளும் பதிவாகி இருந்தன.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக, ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் எனும் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகி இருந்த ஓட்டு சீட்டுகளை எண்ணி, முடிவுகளை தெரிந்து கொள்ள தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, விவிபேட் இயந்திரத்தில் விழுந்த ஓட்டுச்சீட்டுகளை எண்ணி சரி பார்க்கப்பட்டு, அந்த ஓட்டுச்சாவடியில் பதிவான ஓட்டுகளை, வேட்பாளர்களின் முகவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement