விளம்பர செய்தி... படம்... ஸ்ரீ வித்யோதயா கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழா

விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருப்பச்சாவடிமேட்டில் உள்ள வித்யோதயா கல்வியியல் கல்லுாரியில் 11வது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது.

பள்ளியின் கல்வி ஆலோசகர் ஞானாம்பாள் விஸ்வநாதன், ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை இயக்குநரின் மனைவி ரோகினி ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தனர். மாணவி சக்திபிரியா வரவேற்றார். வித்யோதயா கல்வியியல் கல்லுாரி தாளாளர் தியாகராஜன் வாழ்த்தி பேசினார்.

துவக்கப் பள்ளியின் இயக்குநர் ராஜி, கல்வி இயக்குநர் ஓவியா தியாகராஜன், திருவண்ணாமலை காமாட்சி மருத்துவமனை தலைமை இருதய சிகிச்சை நிபுணர் செந்தில்நாதன் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

முதல்வர் சங்கரய்யா ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் விஸ்வநாதன் சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமை காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கல்லுாரியில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. மாணவி லோகஸ்ரீ நன்றி கூறினார்.

Advertisement