வெற்றிச்சான்றிதழ் தரமறுப்பு  தே.மு.தி.க.,வினர் அதிருப்தி

விருத்தாசலம்: ‘பிரேமலதா இல்லாமல், அவரது முகவரிடம் வெற்றிச்சான்றிதழ் தர முடியாது’ என தேர்தல் நடத்தும் அலுவலர் மறுத்துவிட்டார்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா 69,351 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். இருப்பினும் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு அவர் வராத நிலையில், அவரின் முகவர் சிவக்கொழுந்து, வெற்றிச்சான்றிதழ் தருமாறு கோரினார்.

ஆனால், வேட்பாளர் இல்லாமல் வெற்றிச்சான்றிதழ் தர முடியாது என தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் சான்றிதழுடன் செல்லலாம் என காத்திருந்த அக்கட்சி நிர்வாகிகள், முகவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து பிரேமலதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தான் நேரில் வந்து பெற்றுக் கொள்வதாக தலைமை நிலைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பிரேமலதா வெற்றி பெற்றதாக அறிவித்த தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா, அதற்குரிய ஒப்புதல் கடிதத்தை முகவரும், மாவட்ட செயலாளருமான சிவக்கொழுந்து உட்பட நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார்.

Advertisement