'ஆசிட்' வீச்சு பாதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- டில்லி சிறப்பு நிருபர் -: 'ஆசிட் வீச்சின் போது உடலில் வெளிப்படையான தழும்புகள் அல்லது சிதைவுகள் இல்லாவிட்டாலும், உட்புறக் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருத்தம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 2016ல் கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அந்த சட்டத்தின்படி, ஆசிட் வீச்சால் உடல் சிதைந்தவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர்.
ஆனால், வலுக்கட்டாயமாக ஆசிட் புகட்டப் பட்டு உட்புற காய மடைந்தவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது.
எனவே, அவர்களையும் மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இந்த திருத்தம் சட்டம் இயற்றப்பட்ட 2016 காலத்திலிருந்தே இது அமலுக்கு வந்ததாகக் கருதப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆசிட் வீச்சுத் தாக்குதலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''சட்டத்தின் குறுகிய வரையறையால் உட்புறக் காயமடைந்த பலருக்கு உரிய அரசு சலுகைகள் மறுக்கப்படுகின்றன,'' என வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விதிகளில் திருத்தம் செய்ய ஒப்புக்கொண்டார்.
வலியுறுத்தல் மேலும், சட்டவிரோதமாக ஆசிட் விற்பனை செய்யும் கடைக்காரர்களையும் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு வெளியில் தெரியாத வலிகளுடன் வாழும் ஆயிரக்கணக்கானோருக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சையில் முன்னுரிமை கிடைக்கும்.
மேலும்
-
நேரடி வரி வசூல் ரூ.23.40 லட்சம் கோடியாக அதிகரிப்பு
-
ஆண்டிபட்டியில் தம்பியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற அண்ணன்
-
மன்னராட்சிக்கு மக்கள் முடிவு: ஆதவ் அர்ஜுனா உற்சாகம்
-
சசிகலா வேட்பாளரால் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்வி
-
பிரதான கட்சிகள் வழங்கிய பணத்தை வாங்கி தம் விருப்பப்படியே ஓட்டளித்த வாக்காளர்கள்
-
திமுகவில் ஓரம் கட்டப்பட்ட வி.எஸ்.பாபு முதல்வரை எதிர்த்து வெற்றி