மீண்டும் வெற்றி பெற்ற கருணாநிதி சென்டிமென்ட்

1

- நமது நிருபர் -

தி.மு.க., வரலாற்றில் ஒரு முறை தான், அக்கட்சியால் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முடிந்துள்ளது. அதனால், தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வர முடியாது என்ற 'கருணாநிதி சென்டிமென்ட்' மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி, 1967ல் அமைந்தது. அக்கட்சியின் முதல்வராக, அண்ணாதுரை பொறுப்பேற்றார். அவரது ஆட்சி இரண்டு ஆண்டுகள் நீடித்த நிலையில், அவர் மறைந்ததும், கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்.

தி.மு.க., ஆட்சி முடிந்த பின், 1971ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, கருணாநிதி முதல்வரானார். அதன்பின்னர், அக்கட்சியால் தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை.

கருணாநிதி காலத்திலேயே அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன; ஆனாலும், தோல்வியே கிடைத்து வந்தது. அந்த நிலையை, இந்த தேர்தலில் மாற்றிக் காட்ட, அக்கட்சி பெரும் முயற்சி எடுத்தது. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

மீண்டும் இரண்டாவது முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சியை தொடர வைப்பார் என, அக்கட்சியினர் நம்பினர். ஆனால், மீண்டும் ஸ்டாலினால் முதல்வராக முடியவில்லை. 'கருணாநிதி சென்டிமென்ட்' மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement