அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்
சென்னை: தேர்தலில், தி.மு.க., அமைச்சர்களை வீழ்த்தியவர்களை கவுரவப் படுத்தும் வகையில், அதே துறைகளில் அமைச்சர் பதவிகளை வழங்க, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க., தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளார்.
சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலினை, த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு வீழ்த்தி உள்ளார். த.வெ.க., அலையில் சிக்கி, சபாநாயகர் அப்பாவு படுதோல்வியை தழுவியுள்ளார்.
மேலும், இந்த தேர்தலில், த.வெ.க., சார்பில் முதல்முறையாக போட்டியிட்டவர்களில் சிலர், தி.மு.க., அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், மகேஷ், கீதா ஜீவன், மூர்த்தி, தியாகராஜன், அன்பரசன், சாமிநாதன், முத்துசாமி, காந்தி, மதிவேந்தன், சுப்பிரமணியன், டி.ஆர்.பி.ராஜா, ராஜேந்திரன், நாசர் ஆகியோரை தோற்கடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
அதனால், அமைச்சர்களை வீழ்த்திய த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அதே துறைகளை வழங்கி இன்ப அதிர்ச்சி அளிக்கவும், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோரை வீழ்த்தியவர்களுக்கும் முக்கிய துறைகள் வழங்கவும் விஜய் திட்டமிட்டு உள்ளதாகவும் த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (10)
விருமாண்டி - Benaras,இந்தியா
06 மே,2026 - 14:11 Report Abuse
அமெரிக்காவில் ட்ரம்ப்பை MAGA தற்குறிங்க தேர்ந்தெடுத்து நாசம் பண்ண அதே நிலையில் தான் தற்போது தமிழ்நாடு உள்ளது. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
06 மே,2026 - 11:21 Report Abuse
அந்த அளவு அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாததால், அமைச்சர்கள் அவர் அவர்கள் துறைகளில் புகுந்து விளையாட வாய்ப்பு உள்ளது. இதில் பழம் பெருச்சாளிகள் மிக பெரிய வேலை செய்வார்கள்.
இவை எல்லாம் இன்னும் 6 மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வரும். சரியான அதிகாரிகளை கையில் வைத்து அமைச்சர்கள் மற்றும் MLA களுக்கு கடிவாளம் போடா விட்டால், திரும்ப அரசியலலில் வர முடியாத நிலைமை, அட்ரெஸ்ஸை இழக்க நேரிடும். 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
06 மே,2026 - 08:07 Report Abuse
யாரை எந்த அமைச்சரவையில் நியமிச்சாலும் நிர்வாகம் ஒரே மாதிரிதானே இருக்கும் >> 0
0
Reply
raj82 - chennai,இந்தியா
06 மே,2026 - 07:49 Report Abuse
If Babu b3comes CM that will be wonderful.
With in a year we confirm TVK will be buried 0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
06 மே,2026 - 07:44 Report Abuse
இது தேவையற்றது. அவரவர் தகுதிக்கு அல்லது அறிவுக்கு ஏற்ற பதவிகளை கொடுத்து மக்கள் எதற்காக இவரை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்து அதை நிறைவேற்றுவது நல்லது, இது இவருக்கு மக்கள் வைக்கும் சோதனை காலம், இதில் சினிமா போல ஆடினால் பிறகு காணாமல் போய் விடுவார்.. 0
0
Reply
Karthikeyan - ,இந்தியா
06 மே,2026 - 07:30 Report Abuse
முதல்வரை தோற்கடித்த வி எஸ் பாபுவுக்கு முதல்வர் பதவி தரவேண்டியது தானே 0
0
Reply
Shahjahan - ,இந்தியா
06 மே,2026 - 06:18 Report Abuse
Than Babu should be CM 0
0
Reply
விருமாண்டி - Benaras,இந்தியா
06 மே,2026 - 06:10 Report Abuse
மம்தா முகர்ஜியை தோற்கடித்த சுவேந்து மே.வங்க முதல்வர் என்று சொல்கிறீர்கள், அப்போ முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு தான் புது முதல்வரா? 0
0
guna - ,
06 மே,2026 - 07:30Report Abuse
விருமாண்டி..என்ன ஸ்டாலின் தோத்துடாரா.... மறுக்கா மறுக்கா சொல்லு... 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06 மே,2026 - 06:06 Report Abuse
நல்ல முடிவு வரவேற்க்கிறோம் 0
0
Reply
மேலும்
-
எங்கள் கொள்கையில் சமரசத்திற்கு இடமில்லை; அமைச்சர் ராஜ்மோகன் பதில்
-
செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கணும்; தமிழக அரசிடம் அனுமதி கேட்கிறது அமலாக்கத்துறை
-
அரக்கோணம்- செங்கல்பட்டு இரட்டை வழித்தடம் திட்டத்திற்கு ரயில்வே ஒப்புதல்
-
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு; குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை
-
கோவில்களில் தங்கம் இருப்பு; வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
Advertisement
Advertisement