லோயர்கேம்பில் பம்பிங் மோட்டார் பழுது: குடிநீர் வினியோகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
கூடலுார்: லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்யும் மோட்டார் பழுது ஏற்பட்டதால் கூடலுாரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் மோட்டார் மூலம் பம்பிங் செய்து நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து சுத்திகரிக்கப்பட்டபின் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் பம்பிங் செய்வதற்காக 3 மோட்டார்கள் உள்ளன. இதில் 2 மோட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் ஒரு மோட்டாரிலும் முழுமையாக பம்பிங் செய்ய முடியவில்லை. இதனால் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நகர்பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை. மோட்டார் சீரமைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் கூறுகின்றனர். இது தொடர்பாக முன்கூட்டியே நகராட்சி அதிகாரிகள் அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை. பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மேலும்
-
கள்ள நோட்டு அச்சிட்ட மூவர் கைது
-
வழிகாட்டும் பெயர் பலகைகளை மறைக்கும் செடி கொடிகள்: வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பம்
-
தினமலர் செய்தி எதிரொலி:த.வெ.க., பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்
-
குளோபல் பள்ளி மாணவருக்கு பாராட்டு
-
திருச்சுழி அரசு மருத்துவமனை அருகில் மரண குழியால் அபாயம்
-
கோடைகால கூடை பந்தாட்ட பயிற்சி முகாம் நிறைவு