பட்டியலின ஓட்டுகளை த.வெ.க.,வுக்கு அள்ளி தந்த ஆதவ் அர்ஜுனா
சென்னை: வி.சி.க.,வில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, பட்டியலின ஓட்டுகளை பெருமளவில், த.வெ.க.,வுக்கு பெற்று தந்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி.க.,வை வெளியேற்றி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை முன்னெடுக்க வேண்டும் என, வி.சி.க.,யில் இருந்தபோதே, ஆதவ் அர்ஜுனா பேசினார்; அதனால், வி.சி.க.,ல் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பின், த.வெ.க.,வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, பட்டியலின மக்கள் ஓட்டுகளை குறிவைத்து, காய்களை நகர்த்தினார். குறிப்பாக, தி.மு.க., மீது அதிருப்தியில் இருக்கும் பட்டியலினத்தவர்களை, த.வெ.க., பக்கம் கொண்டு வர, மறைமுகமாக வி.சி.க., நிர்வாகிகளையே பயன்படுத்தினார்.
மேலும், தி.மு.க., ஆட்சியில் பணி பாதுகாப்பு கேட்டு, துாய்மை பணியாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடினர். அவர்களில் பெரும்பாலோனார் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் ஓட்டுகளையும் த.வெ.க., குறிவைத்தது.
இ தன் பயனாக, பட்டியலினத்தவர் ஓட்டுகள், வி.சி.க., மற்றும் தி.மு.க., வுக்கு செல்லாமல், பெரும்பாலும் த.வெ.க.,வுக்கு விழுந்துள்ளன.
பரம விரோதி தோற்றுவிட்டது.வாழ்க வளர்க
திருமா யதார்த்த நிலையை புரிந்து கொள்ளவில்லையா .இல்லை திமுக விடவில்லையா
திருமா மாதிரி நல்ல அரசியல் வாதிகளை திமுக தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்டது.