அழியும் 'யார்க்கர்' கலை * 'ரவுண்ட்-அப்'
புதுடில்லி: 'டி-20' போட்டிகளில் கடைசி கட்ட ஓவர்களில் பேட்டிங் தரப்பில் நெருக்கடி அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் கேப்டன்கள், துல்லியமாக 'யார்க்கர்' வீசும் பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அணியை வெற்றிபெறச் செய்வர். மலிங்கா, பிராவோ, பும்ரா உள்ளிட்டோர் அசத்தினர்.
தற்போது, நவீன 'டி-20'ல் பேட்டர்கள் கிரீசிற்குள் ஒரு இடத்தில் நிற்பது இல்லை. இதனால் 'யார்க்கர்' வீச முயற்சித்து, சற்று தவறு செய்தாலும், அதை பவுண்டரியாக மாற்றி விடுகின்றனர்.
2008ல் 'டெத் ஓவர்' (17 முதல் 20) ரன் ரேட் 9.41 ரன்னாக இருந்தது. 2025ல் இது 11.5 ஆனது. முன்பு அணியின் சராசரி ஸ்கோர் 157 ஆக இருந்தது, 2025ல் 180 ரன் ஆனது. இம்முறை 220க்கும் மேல் எடுத்தாலும் எளிதாக சேஸ் செய்கின்றனர்.
இதனால், பவுலர்கள் 'யார்க்கர்' வீசுவதை குறைத்து விட்டனர். வேகம் குறைவாக, 'வைடு லைன்', 'ஹார்ட் லென்த்' என வீசுகின்றனர். இந்திய அணி முன்னாள் வீரர் மதன்லால் கூறுகையில்,'' பேட்டர்களுக்கான போட்டியாக 'டி-20' இருந்தாலும், சரியான 'லைன் அண்டு லென்த்தில்' துல்லியமாக 'யார்க்கர்' வீசினால் பலன் தருகிறது. இதற்கு தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.
மும்பை ரொம்ப 'லேட்'மும்பை: மும்பை அணி வீரர் ரோகித் சர்மா. 18 சீசனில் 5 முறை மட்டும் 350 ரன்னுக்கும் குறைவாக எடுத்துள்ளார். 2024ல் 14 போட்டியில் 417, 2025ல் 15ல் 418 ரன் எடுத்தார். இம்முறை காயம் காரணமாக தொடர்ந்து 5 போட்டியில் பங்கேற்கவில்லை. மீண்டும் களமிறங்கிய இவர், லக்னோவுடன் 44 பந்தில் 84 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
ஆனால், இவரது வருகை மிகத் தாமதமாகி விட்டது எனலாம். மும்பை அணி இதுவரை 10ல் 3 வெற்றியுடன் (7 தோல்வி) 6 புள்ளி மட்டும் பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டியில் அதிக ரன்ரேட்டில் வென்றாலும் 14 புள்ளி தான் பெற முடியும். பின் மற்ற போட்டிகளின் முடிவுக்கு ஏற்ப, 'பிளே ஆப்' தெரியவரும்.
எக்ஸ்டிராஸ்
* இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். கடந்த 2025, டிச. 18ல் போட்டி இல்லாத நாளில், நடத்தப்பட இருந்த ஊக்கமருந்து சோதனை தவிர்த்தார். இதுகுறித்த வினேஷ் விளக்கத்தை சர்வதேச சோதனை ஏஜென்சி ஏற்றுக் கொண்டது. இருப்பினும், முறைப்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
* ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து (17 வயதுக்குப்பட்ட) தொடரில் இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 0-3 என ஜப்பானிடம் தோல்வியடைந்தது.
* இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரர் மனாஸ் தாம்னே 18. கடந்த வாரம் அசத்திய இவர், சாலஞ்சர் தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து வெளியான தரவரிசை பட்டியலில் மனாஸ், 60 இடம் முன்னேறி 'டாப்-400' பட்டியலில் நுழைந்தார். தற்போது இவர் 384 வது இடத்தில் உள்ளார்.
* ஆசிய கோப்பை ஹாக்கி (18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள்) தொடர், ஜப்பானில் இம்மாதம் நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்தியாவின் இரு அணிகளும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டி கொண்ட தொடரில் (மே 15-20) பங்கேற்க உள்ளது. போட்டிகள் போபாலில் நடக்க உள்ளன.
* கஜகஸ்தானில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் ('ஷாட்கன்') நடக்கிறது. இந்தியாவின் அனுபவ வீரர் மைராஜ், ஸ்கீட் பிரிவில், 119 புள்ளியுடன் 18வது இடம் பிடித்து, பைனல் வாய்ப்பை இழந்தார்.
* கர்நாடகாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, 7-5, 1-6, 6-4 என சக வீராங்கனை டானிகாவை வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் மாதுரிமா, சந்தீப்தி, சோனல் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
* ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் பணிகள் தொடர்பான குழுவின் தலைவராக, இந்திய அணி முன்னாள் வீரர் அம்பதி ராயுடு 40, நியமிக்கப்பட்டார்.
மேலும்
-
ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு
-
நகராட்சியில் ஓடைகள் துார்வாரும் பணி தீவிரம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
-
அமைச்சுப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி
-
வானமாதேவி உயர்மட்ட பாலத்தில் வளர்ந்துள்ள மரம், செடிகொடிகள் வலுவிழக்கும் அபாயம்
-
வளர்ச்சி திட்ட பணி கலெக்டர் ஆய்வு
-
இன்றைய நிகழ்ச்சிகள்