இந்திய அணி 'நம்பர்-1' * 'டி-20' தரவரிசையில் அபாரம்

துபாய்: 'டி-20' தரவரிசையில் இந்திய ஆண்கள் அணி 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு இறுதி, புதிய 'டி-20' தரவரிசை பட்டியல் வெளியானது. இதன் படி, 2025, மே மாதம் முதல் விளையாடிய அனைத்து போட்டிகளுக்கும் 100 சதவீதம், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் பங்கேற்ற போட்டிகளுக்கு 50 சதவீதமும் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இதில், இந்தியா பங்கேற்ற 52 போட்டிகளுக்கு 14306 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த மார்ச் மாதம், 'டி-20' உலக கோப்பை தொடரில் அசத்திய இந்தியா, முதன் முறையாக மீண்டும் கோப்பையை தக்கவைத்தது. தவிர, 2007, 2024, 2026 என மூன்று முறை 'டி-20' உலக சாம்பியன் ஆன இந்திய அணி, மொத்தம் 275 ரேட்டிங் புள்ளியுடன், 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்தது.
13 புள்ளி குறைவாக உள்ள இங்கிலாந்து (262) அணி 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (258) மூன்றாவது இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து (247), தென் ஆப்ரிக்கா (244), பாகிஸ்தான் (240), வெஸ்ட் இண்டீஸ் (233) அணிகள் 4, 5, 6, 7வது இடத்தில் உள்ளன.
8, 9, 10 வது இடங்களில் வங்கதேசம் (225), இலங்கை 221), ஆப்கானிஸ்தான் (220) உள்ளன. ஜிம்பாப்பே (202), அயர்லாந்து (199) அணிகள் 11, 12 வது இடத்தில் உள்ளது.
6 புள்ளி கூடுதலாக பெற்ற அமெரிக்கா (183) 13வது இடத்துக்கு முன்னேறியது. நெதர்லாந்து (180 புள்ளி, 14 வது இடம்), ஸ்காட்லாந்தை (179, 15) பின் தள்ளியது. நமீபியா (178) 16வது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (174, 18), கனடாவை (149, 20) முந்திய, நேபாளம் (178, 17), ஓமன் (158, 19) அணிகள் 17, 18 வது இடம் பிடித்தன.
ஒருநாள் எப்படி
ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 119 புள்ளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. நியூசிலாந்து (111), ஆஸ்திரேலியா (109) அடுத்த இரு இடத்தில் உள்ளன. பாகிஸ்தான் (109), தென் ஆப்ரிக்கா (98), 4, 5வது இடத்தில் உள்ளன

'டி-20'ல் 'டாப்-5'
ரேங்க் அணி புள்ளி

1 இந்தியா 275
2 இங்கிலாந்து 262
3 ஆஸ்திரேலியா 258
4 நியூசிலாந்து 247
5 தென் ஆப்ரிக்கா 244

Advertisement