சிறப்பான எதிர்கட்சியாக தி.மு.க., செயல்படும்
தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிக்கை :
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கடந்த ஐந்தாண்டு காலத்தில், ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழகத்தை அனைத்து வகையிலும் உயர்த்தினோம்.
தேர்தல் களத்தில், எங்கள் சாதனைகளை சொல்லியே ஓட்டு கேட்டோம். மக்களுக்கு செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடர ஓட்டு கேட்டு, நாங்கள் பிரசாரம் செய்தோம். தி.மு.க., தலைமையிலான, மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து ஓட்டளித்த, தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி. ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல; ஓட்டளிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன்.
என் மனசாட்சி படி செயல்பட்டேன். என் சக்தியை மீறி உழைத்தேன். என்னை போன்றே களத்தில் உழைத்த, என் உயிரோடு கலந்திருக்கும், தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி. எங்கள் தோளோடு தோள் நின்ற, கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி.
என் அரசியல் பொது வாழ்வில், அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே, லட்சியமும், கொள்கையும் தான் முக்கியமே தவிர, வெற்றி, தோல்விகள் மட்டுமல்ல என, செயல்படக்கூடியவன் நான். அதனால், தி.மு.க.,வின் அரசியல் பயணம், தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்கு சிறப்பான ஆளும்கட்சியாக செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிறப்பான ஆளும் கட்சியாக நீங்கள் செயல்பட்டிருந்தால், இன்று இந்த நிலை வந்திருக்குமா?
திமுகவில் உள்ள வயதான தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்
பத்து பைசாவிருக்கு பிரயோஜனம் இல்லாதவர் தன் மகன் என்று முன்னரே அவரது தந்தை தீர்க்கதரிசியாக தெரிந்து வைத்து உள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, கொளத்தூர் தொகுதியில் அது எதிரொலிக்கும்...!!
பாஜகவை திருப்பரங்குன்றம் முருகனே கைவிட்டு விட்டாரே!
1). மக்கள் தீர்ப்பை வரவேற்க வேண்டும்.
2). திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி சூரபத்மனை வதம் செய்து உள்ளார்.
3). பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக செய்த பாவங்களை சிறுபான்மையினர் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளது.
4). எந்த முகத்தை வைத்து கொண்டு இனி வெளியில் சுற்ற முடியும்.
5). தனக்கு ஆப்பு வைத்து கொண்டதோடு மட்டுமில்லாமல் தன் மகன் அரசியல் எதிர்காலததிற்கு ஆப்பு வைத்து உள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.
எவனும் பிச்சிகிட்டு போகாம இருப்பதை பார்ப்பதற்கே நேரம் சரியாக இரருக்கப்போகிறது. வரும்காலங்களில் சித்தப்பு என்ற பெயர் எடுபடுகிறதா என பாருங்கள்.
இனிமேலாவது மத்திய அரசை எடுத்ததற்கெல்லாம் குறை கூறாமல் ஒப்பனை இல்லாமல் மக்களைச் சந்தியுங்கள். நீங்கள் சைக்கிள் ஓட்டுவதால் யாருக்கு நன்மை
கேவலமாக தோற்றாலும் அகந்தை போகவில்லை இன்னும் . சிறப்பாக செயல் பட்டாராம் , சக்திக்கு மீறி உழைத்தாராம் , ஓட்டளிக்க மறந்தவர்களுக்கும் ஆட்சி செய்தாராம்
இந்த தேர்தலில் எதிர்க்கட்சி. அப்புறம் நிரந்தர ஓய்வுதான். திராவிட கழகங்களின் முடிவு ஆரம்பமாகிவிட்டது.
மக்கள் விரோத ஆட்சி செய்த ஸ்டாலின் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.மேலும்
-
தவெகவின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு
-
தவெகவுக்கு ஆதரவா? நாங்கள் சிந்திக்கவில்லை என்கிறார் திருமா
-
எந்த கட்சியின் ஓட்டுகளை வாரிச்சுருட்டியது விஜய் அலை?: முழு விபரம்
-
அதிக, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 வேட்பாளர்கள் யார்?
-
2026 தேர்தல்: தமிழ்த் திரையுலகினரின் வெற்றியும்... தோல்வியும்...
-
ஸ்டாலினின் முதல்வர் பதவி ராஜினாமா ஏற்பு