தவெகவின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு

11

நமது நிருபர்




தவெக சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்நிலையில் இன்று (மே 05) சென்னை பனையூரில் தவெக தலைமை அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement