விஜய்க்கு திரிஷா நேரில் வாழ்த்து

6

சென்னை: தேர்தலில் வெற்றிப் பெற்ற த.வெ.க., தலைவர் விஜயை நேரில் சந்தித்து, நடிகை திரிஷா வாழ்த்து தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, த.வெ.க., அதிக இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

முன்னதாக, விஜயின் தோழியான நடிகை திரிஷா, மே 4ம் தேதி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி, திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார்.

அந்த கையோடு, சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு, நேற்று மதியம் 12:50 மணிக்கு திரிஷா வந்தார்.

அவரை வாசலில் வந்து விஜய் வரவேற்று, ஆரத்தழுவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அவருக்கு தேர்தல் வெற்றிக்கான வாழ்த்து சொன்ன திரிஷா, திருப்பதி கோவிலில் இருந்து கொண்டு வந்த பிரசாதத்தை வழங்கினார்.

இதையடுத்து, 20 நிமிடங்களுக்கு மேல், இருவரும் தனியாக சந்தித்து பேசினர். தொடர்ந்து, மதிய உணவை ஒன்றாக சாப்பிட்டனர். இதையடுத்து, மதியம் 2:11 மணிக்கு விஜய் வீட்டில் இருந்து திரிஷா கிளம்பினார்.

Advertisement