விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

2

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., வெற்றி முடிவுகள் வரத் தொடங்கியதும், த.வெ.க.,வின் பனையூர் அலுவலகத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆளும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆட்சியில் இருந்த, தி.மு.க.,வின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், சென்னை காவல்துறை சார்பில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும், த.வெ.க., முன்னிலை பெறத் தொடங்கியது. அக்கட்சி அதிக இடங்களைப் பெற தொடங்கியதும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள, த.வெ.க., தலைமை அலுவலகத்துக்கு, தாம்பரம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவின் பெயரில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அலுவலகத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்திய சஞ்சய் குமார், அங்கிருந்த போலீசாரிடம், கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.

Advertisement