சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் விஜய்
சென்னை: தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதால், சினிமாவில் இருந்து முழுமையாக விலகும் முடிவை, த.வெ.க., தலைவர் விஜய் எடுத்துள்ளார்.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் விஜய், 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் த.வெ.க., எனும் கட்சியை தொடங்கினார். அந்த சமயத்தில், ஜனநாயகன் படத்தில் நடித்து வந்த விஜய், 'இதுதான் எனது கடைசி படம்' என அறிவித்தார்.
ஆனால், ஜனநாயகன் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் முன்பாக, இணையதளத்தில் கசிந்தது. இதனால், படக்குழுவுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதேநேரத்தில், தேர்தலில் முழுமையான வெற்றி பெற வாய்ப்பில்லை என, விஜய் கருதினார்.
இதனாலும், படக்குழுவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவும், மீண்டும் சினிமாவில் நடிக்க விஜய் திட்டமிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, த.வெ.க., பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இனி சினிமாவில் விஜய் நடிக்க முடியாது என்பதால், படக்குழு நஷ்டத்தை ஈடுகட்ட, வேறு வழியில் முயற்சி செய்யப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
Happened is happened lets accept and expect change
108 க்கே இந்த ஆட்டம் போடுறீங்க. இந்நேரம் 118 தொகுதியில் ஜெயித்து இருந்தா என்ன ஆட்டம் போடுவீங்க. தமிழக மக்கள் உருவத்துல கடவுள் இருக்காரு.
உங்களுக்கு support பண்ண போற அந்த 10 MLA க்கள் தான் எப்படி பணிந்து வாலாட்ட பண்றாங்கன்னு தெரியல
எதிர்பாராத வெற்றி என்று எப்படி சொல்கிறீர்கள்.மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு கொடுங்கள்.
there is NO legal or technical bar on Vijay acting.All MPs MLAs can have private professions
ஹலோ அது என்ன எதிர்பாராத விதமா வெற்றி சொல்லுறீங்க மக்கள் நம்பிக்கை மக்கள் சக்தி வென்றிக்கிறதுமேலும்
-
திடீர் மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு: கள ஆய்வு செய்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம்
-
லோயர்கேம்பில் பம்பிங் மோட்டார் பழுது: குடிநீர் வினியோகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
-
அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்
-
கண்ணகி கோயிலில் உலா வந்த காட்டு யானைகள்
-
விஜய் ஆட்சி அமைக்க காங்., ஆதரவா? கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை