எந்த மாநிலத்திலும் கம்யூ., ஆட்சி இல்லை; 50 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்
புதுடில்லி: 1977க்குப் பிறகு முதன்முறையாக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத சூழல் உருவாகி உள்ளது. கேரள வாக்காளர்கள் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை வீழ்த்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றியைத் தந்துள்ளனர்.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ., இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவு, முதல்வர் பினராயி விஜயனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
2016ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக எழுந்த அலையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் பயணித்து, 102 இடங்களை வென்றது. ஆனால் இந்த முறை 2026ம் ஆண்டு தேர்தலில் படும் தோல்வி அடைந்து இருக்கிறது. 10 ஆண்டுகால இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், 98 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
அதேநேரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தன் சொந்த தொகுதியான தர்மடத்தில் வெற்றி பெற்றார். எனினும் அவரது கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியிடம் ஆட்சியை பறி கொடுத்தது. 1977க்குப் பிறகு முதன்முறையாக, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத சூழல் உருவாகி உள்ளது.
இந்தத் தோல்வி, இண்டி கூட்டணியில் இடதுசாரிகளின் செல்வாக்கை அநேகமாக குறைக்கும் என்பதையும் குறிக்கிறது. இண்டி கூட்டணியில் உள்ள மேலும் 2 கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. மேற்வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் (முதல்வர் மம்தா)மற்றும் தமிழகத்தில் திமுக (முதல்வர் ஸ்டாலின்) ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளன.
@block_P@
ஏற்கனவே ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு, நாட்டின் எந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இல்லை என்ற நிலை உருவாகும் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கணித்து நிருபர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக கூறியிருந்தார். தற்போது அவரது கணிப்பு உண்மையாகிவிட்டது.block_P
கம்யூனிஸ்ட் இன் ஒரே கொள்கை இந்தியாவை அழிக்கவேண்டும்
கம்யுனிஸ்ட் இல்லாத இந்தியா.... இவர்கள் தேவையில்லாத ஆணிகள்.... கான் கிராஸ் கட்சிக்கு எதிராக தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு.... மக்களை அறிவு இல்லாதவர்கள் என்று நினைத்து கொண்டு டில்லியில் அதே கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கூத்து அடிப்பார்கள்..... அதனால் தான் மக்கள் கம்யுனிஸ்ட் கட்சியை நாட்டில் இருந்து விரட்டி அடித்து விட்டார்கள்.... விரைவில் கான் கிராஸ் இல்லாத இந்தியா என்ற நிலை வர வேண்டும்.... தேச விரோத கான் கிராஸ் கட்சி ஒழிந்தால் நாட்டில் பாதி தீவிரவாதம் ஒழிந்து விடும்.
அந்த சொப்னாக்கா எங்கே?
தங்கம்
அடுத்து, இந்தியாவில் பின்னாளில் வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும் படு தோல்வி அடைந்து, கம்யூ. கட்சி காணாமல் போனதுபோல, காங்கிரஸ் கட்சியும் காணாமல் போகும்.
கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இனி காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற மோடிஜி முயற்சிக்க வேண்டும்.
அழிந்து போகவேண்டிய சித்தந்தம். அடுத்த நாட்டுக்கு காவடி தூக்குவது என்ற சித்தாந்தத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி . இப்படி தேய்ந்து பொய் அழிவதுதான் நடக்கவேண்டும்.
நாடு விரைவில் முன்னேறும்.
இந்த வெற்றியில் ஜெயித்த 4 கம்யூனிஸ்டுகளை தோற்கடித்திருந்தால் தமிழ்நாட்டுக்கு மிஹசுவும் நல்லதாக இருந்திருவுக்கும்
இவர் எங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் தொழில்கள் நடக்காது. இலவசங்களை கொடுத்து மக்களை இலவச பிச்சை எடுக்க வைத்து விடுவார்.
இதற்கு மிக சிறந்த உதாரணங்கள் - வங்காளம் மற்றும் கேரளா.மேலும்
-
திடீர் மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு: கள ஆய்வு செய்து பிரத்யேக செயலியில் பதிவேற்றம்
-
லோயர்கேம்பில் பம்பிங் மோட்டார் பழுது: குடிநீர் வினியோகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி
-
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலம் விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
-
அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு அதே துறைகளில் மந்திரி பதவியா? விஜய் புதிய திட்டம்
-
கண்ணகி கோயிலில் உலா வந்த காட்டு யானைகள்
-
விஜய் ஆட்சி அமைக்க காங்., ஆதரவா? கிரீஷ் ஷோடங்கர் ஆலோசனை