கோவை மாவட்டம் நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் திருக்கல்யாணம் எருக்கம்பெனி ஜீவா நகர், ஸ்ரீபுற்றுக்கண் நாகமுத்து மாரியம்மன் கோயில் திருக்கல்யாண திருவிழா, காலை 6:00 மணிக்கு சக்தி கரகம் உலா வருதல், மதியம் 12:00 மணிக்கு அன்னதானம். மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை.

உற்சவத்திருவிழா கோட்டை ஸ்ரீவிளையாட்டு மாரியம்மன் கோயில், காலை, 11:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை பூஜை, 12:00 மணிக்கு மறுபூஜை, அன்னதானம்.

ராம்நகர் விவேகானந்தர் ரோடு, வி.என்.தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், காலை சிம்மவாகன புறப்பாடு, திருக்கரகம் அழைத்தில் மாலை பொங்கல், மாவிளக்கு பூஜை.

குண்டம் திருவிழா ராம்நகர் கோகலே வீதி, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை, மாலை 6:00 மணி.

சித்திரை பெருந்திருவிழா வீரகேரளம், ஸ்ரீஅரசமரத்து விநாயகர், ஸ்ரீசிங்காரவேலர், ஸ்ரீமுனியப்பன், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் .

ஆன்மிக சொற்பொழிவு அர்ஷ வித்யா குருகுலம் மற்றும் பாரதீய வித்யா பவன் வழங்கும் உத்தவ கீதா ஆன்மிக சொற்பொழிவு: ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு, பாரதீய வித்யா பவன் அரங்கம், மாலை 6:30 மணி.

பொது சலங்கை பூஜை, நாட்டிய திருவிழா, வடகோவை மாருதி கானசபா, மாலை 6:00 மணி.

Advertisement