மாவட்டத்தில் சுயேட்சைகள் ஓட்டு விபரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகம் மற்றும் குறைந்த ஓட்டுக்களை பெற்ற சுயேட்சை வேட்பாளர்களை உள்ளடக்கிய தொகுதியாக ரிஷிவந்தியம் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில், சுயேட்சையாக 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், உளுந்துார்பேட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட 8 பேரில், கப்பல் சின்னத்தில் போட்டியிட்ட மணிகண்டன் அதிகபட்சமாக 642 ஓட்டு, பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அரசன் குறைந்த பட்சமாக 73 ஓட்டுக்களை பெற்றார்.

ரிஷிவந்தியத்தில் சுயேட்சையாக 15 பேர் போட்டியிட்ட நிலையில், கப்பல் சின்னத்தில் போட்டியிட்ட செந்தில்குமார் அதிகபட்சமாக 1,071 ஓட்டுக்களையும், கடாய் சின்னத்தில் போட்டியிட்ட மாரிக்கண்ணு 64 ஓட்டுக்களையும் பெற்றனர். சங்கராபுரம் தொகுதியில் சுயேட்சையாக 13 பேர் போட்டியிட்ட நிலையில், பரிசு பெட்டம் சின்னத்தில் போட்டியிட்ட மணிகண்டன் 579 ஓட்டுக்களையும், பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட விக்னேஷ் 85 ஓட்டுக்களையும் பெற்றனர்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் சுயேட்சையாக 7 பேர் போட்டியிட்ட நிலையில் கண்காணிப்பு கேமிரா சின்னத்தில் போட்டியிட்ட விக்னேஷ் அதிகபட்சமாக 653 ஓட்டுக்களையும், கிணறு சின்னத்தில் போட்டியிட்ட பிரபு குறைந்தபட்சமாக 145 ஓட்டுக்களையும் பெற்றனர். மாவட்டத்தில் உள்ள 43 சுயேட்சைகளில் ரிஷிவந்தியம் செந்தில்குமார் 1,071 ஓட்டுக்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார்

Advertisement