வெற்றிக்கு துணை நின்ற எம்.ஜி.ஆர். – ஜெ. ஆன்மா சத்யபாமா நெகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில், 69,992 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சத்யபாமா, நிருபர்களிடம் கூறியதாவது:



தமிழக மக்கள், த.வெக., தலைவர் விஜய் பின்னால் இருக்கின்றனர். பணம் இருந்தால், வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற காலம் மாறிவிட்டது; மக்களுக்காக உழைப்பவருக்கு ஓட்டளிப்போம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.  பணம் என்பது இனி என்றென்றும் தேர்தலில் இருக்காது; வாக்கை விலை கொடுத்து வாங்க முடியாது. அரசியல் என்பது வியாபாரமாக மாறிவிட்டது. சேவை செய்ய முடியாது. ஆட்சிக்கு வந்ததும் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று சிந்திக்கும் நிலை இருந்தது. எங்களது வேட்பாளர்கள் எளியவர்கள், பணபலம் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளனர்.



திருப்பூர் வடக்கு தொகுதியில்,  குப்பை பிரச்னை சவாலாக இருக்கிறது. எம்.எல்.ஏ.,வாக வந்து, என்னால் முடிந்த வரை தொகுதி மக்கள் வளர்ச்சிக்காக பாடுபடுவேன். படிப்படியாக, குப்பை பிரச்னைக்கு தீர்வு காண்போம். எங்களின் வெற்றிக்கு, முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆர். – ஜெ. ஆன்மாக்கள் எங்களது வெற்றிக்கு துணை நின்றன.



இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement