சுழற்றி அடித்த காற்றுக்கு பஸ் ஸ்டாண்ட் கூரை சேதம்
திருப்பூர், மே 6–
திருப்பூர் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக பஸ் ஸ்டாண்ட்டில் அமைக்கப்பட்டிருந்த கூரைகள் சேதமாகியது.
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான பஸ் ஸ்டாண்ட் கோவில் வழியில் உள்ளது. தாராபுரம் வழியாக மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பூரிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. பஸ்கள் நிறுத்தப்படும் ரேக்குகள் அமைந்துள்ள இடங்களில் கூலிங் ஷீட் பொருத்திய கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு புறம் பஸ் ஸ்டாண்ட் கட்டட சுவற்றில் இரும்பு ராடுகள் மூலம் ெபாருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் சுற்றுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் வீசிய காற்றில் இந்த பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டிருந்த இந்த கூரைகள் ஒரு பிளாட்பாரத்தில் முழுமையாக துாக்கியெறியப்பட்டு சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் யாருமில்லாததால், எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி