தொடரும் கோடை மழை ‘குளு குளு’ காலநிலையால் குஷி

ஊட்டி: ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் சுற்றுலா பயணிகள் ‘குஷி’ அடைந்துள்ளனர்.

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது சில நாட்கமாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம், 4:00 மணியளவில் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது.

அவ்வப்போது பெய்து வரும் மழையால் மலை காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தவிர, வனத் தீ அபாயம் குறைவதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். ஊட்டியில் மழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களுக்கு வந்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement