கொடியேற்றம்

மேலுார்: திருவாதவூர் பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. மே 6 முதல் 11 வரை சப்பரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். மே 12 கோயில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மே 13 கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.

Advertisement