த.வெ.க., ஓட்டுகளால் அ.தி.மு.க., பா.ஜ., பின்னடைவு: தொடர் தோல்வியால் கவலை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் த.வெ.க., வெற்றியும், 3ல் இரண்டாமிடம் பெற்றுள்ளதால் அ.தி.மு.க., பா.ஜ., கட்சிகள் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை தழுவியுள்ளதால் அக்கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க., மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா, முதுகுளத்துாரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், பரமக்குடி( தனி) கதிரவன் ஆகியோர் தி.மு.க.,விலும், திருவாடானை தொகுதியில் த.வெ.க., டாக்டர் ராஜீவ் வெற்றி பெற்றனர். 2021 சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ., 2ம் இடம் பெற்றனர். தற்போது த.வெ.க., திருவாடானையில் வெற்றியும், மற்ற மூன்று தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க., பா.ஜ., கட்சிகள் மூன்றாமிடம் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளன.
தொடர் தோல்வியால் வேதனை: குறிப்பாக அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முனியசாமியின் மனைவி கீர்த்திகா 2016, 2021 முதுகுளத்துாரிலும், தற்போது திருவாடானையில் போட்டியிட்டு 3வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். இதே போன்று பரமக்குடி, திருவாடானையில் அ.தி.மு.க.,வும், ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ., 2021, 2026 என இருமுறை தொடர் தோல்வியை சந்தித்துள்ளதாக அக்கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.
*மேலும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற சென்டிமென்டும் தகர்க்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சமாதானப்படுத்தியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்! மேட்டுப்பாளையத்தில் தி.மு.க.பாடம்
-
துவங்கியது அக்னி நட்சத்திரம் லிங்க திருமேனிக்கு தாராபாத்திரம்
-
சாரல்
-
சுழற்றி அடித்த காற்றுக்கு பஸ் ஸ்டாண்ட் கூரை சேதம்
-
வெற்றிக்கு துணை நின்ற எம்.ஜி.ஆர். – ஜெ. ஆன்மா சத்யபாமா நெகிழ்ச்சி
-
மாவட்டத்தில் சுயேட்சைகள் ஓட்டு விபரம்