அனுஷ விழா

சோழவந்தான்: -சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் அனுஷவிழா நடந்தது. குருவந்தனம், அனுக்ஞை, அஷ்டோத்திர பூஜைகள், வேதபாராயணம், புனர்அர்ச்சனை, மஹாதீபாராதனை, மந்திரபுஷ்பம், தோடகாஷ்டகம் வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அத்யாபகர் வரதராஜப்பண்டிட்ஜி பூஜைகள் செய்தார். ஹரிஷ்ஸ்ரீநிவாச அய்யர் ஏற்பாடுகள் செய்தார்.

* முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீட கிளையில் நடந்த விழாவில் குரு வந்தனம், பெரியவருக்கு பூஜைகள், தீபாராதனை, தோடகாஷ்டகம் வழிபாடு நடந்தது. வெங்கட்ராமன் பூஜை செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி பொறியாளர் ஸ்ரீகுமார், வீரமணிகண்டன் ஏற்பாடுகள் செய்தனர்.

Advertisement