குறுகிய சாலையில் 'பேரிகார்டு' விபத்து ஏற்படும் அபாயம்

பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை சாலையின் குறுகிய இடத்தில், 'பேரிகார்டு' வைக்கப்பட்டதால், தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

பள்ளிப்பாளையம், ஒட்டமெத்தை சாலையில் மேம்பாலத்தின் ஆரம்ப பகுதியில் சாலையின் மையப்பகுதியில், கடந்த வாரம், 'பேரிகார்டு' வைக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகிய சாலையாக மாறிவிட்டது. சீராக சென்றுகொண்டிருந்த வாகனங்கள், இந்த பேரிகார்டால் வைத்த பின், ஒருவழி பாதையாகவும், தாறுமாறாகவும் வாகனங்கள் செல்லவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விபத்தும் ஏற்படும் நிலையில் உள்ள இந்த பேரிகார்டை அகற்ற, பள்ளிப்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement