முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒன்றேகால் கப் ,புதிய/உலர்த்தப்பட்ட தேங்காய் - 2 ஸ்பூன் , சமையல் சோடா, பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன் , உப்பு - ¼ ஸ்பூன் , பால் - ¾ கப், காபி தூள் - 1 ஸ்பூன், தூய கோகோ தூள் - ½ கப் (இனிப்பு சேர்க்காதது) ,n பழுப்பு சர்க்கரை - ½ கப் , எண்ணெய் - 1/4 கப் ,வெண்ணிலா - 1 ஸ்பூன் , வாழைப்பழங்கள் - 2 (அரை முதல் முக்கால் கப் சதைப்பற்று), சாக்லேட் சிப் அல்லது கோகோ நிப்ஸ் - 3 ஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மாவு, சமையல் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, துருவிய தேங்காய் ஆகிய உலர் பொருட்களைக் கலந்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை சூடாக்கி, அதில் கோகோ, காபி தூள் சேர்த்து கலக்கவும். வெண்ணிலா, சர்க்கரை மற்றும் எண்ணெயை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அடுத்து, வாழைப்பழத்தை கூழாக்கி, அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது, ஈரமான கலவை தயாராகிவிட்டது. உலர் பொருளை ஈரமான பொருளுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். அதிகமாகக் கலக்க வேண்டாம். காகிதம் விரிக்கப்பட்ட லோப் பேனில் இந்தக் கலவையை ஊற்றி, அதன் மேல் சாக்லேட் சிப்ஸ் அல்லது கோகோ நிப்ஸ்களைத் தூவி, 180°C-க்கு முன்சூடு செய்யப்பட்ட அடுப்பில் 40 நிமிடங்கள் அல்லது அது வெந்துவிடும் வரை சுடவும்.
கேக்கை வெளியே எடுத்து, ஆறவைத்து, துண்டுகளாக வெட்டிச் சுவைக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3 முதல் 4 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். கேக்கை மைக்ரோவேவில் 30 விநாடிகள் சூடுபடுத்தி, ஒரு கோப்பை காபி அல்லது தேநீருடன் சுவைத்து மகிழுங்கள்.
மேலும்
-
மும்மொழி திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது
-
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
-
அ.தி.மு.க., மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு ஏதும் இல்லை: சபாநாயகர்
-
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுதும் வேலை கொடுங்க
-
த.வெ.க., ஆட்சியும் திராவிட ஆட்சி தான்: அடித்து சொல்கிறார் கமல்
-
முதல்வர் விஜய் அமைச்சரவையில் அ.தி.மு.க.,வினருக்கு இடம் உண்டா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்