ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி
செய்முறை : முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொத்தமல்லி விதைகள், காய்ந்த சிவப்பு மிளகாய், சீரகம், பூண்டு, வெந்தயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கோங்குரா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு லைட்டாக அரைத்து பிறகு அதனுடன் வதக்கி வைத்துள்ள புளிச்ச கீரை இலைகளையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமென்றால் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பாதி வெங்காயத்தைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதன் சுவை அருமையாக இருக்கும்.
அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து 2 டீஸ் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த சிவப்பு மிளகாய், உரிக்காத பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள கோங்குரா விழுதை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பிறகு உங்கள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து வதக்கிக்கொள்ளுங்கள். எண்ணெய் பிரிந்துவரும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் சுவையான கோங்குரா பச்சடி ரெடி.
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்