ஈரானுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முன்னேற்றம்: அதிபர் டிரம்ப் தகவல்

2

வாஷிங்டன்: ஈரானுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்தார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையிலும்; ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது நாம் அடைந்த மகத்தான ராணுவ வெற்றியின் அடிப்படையிலும், ஈரானுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. ஒரு விஷயத்தில் நாம் பரஸ்பரம் உடன்பட்டுள்ளோம்.

பொருளாதாரத் தடையானது தொடர்ந்து முழு வீச்சில் அமலில் இருக்கும் அதே வேளையில், அதே வேளையில், ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா இல்லையா என்பதைப் பார்ப்பதற்காக, நான் அறிமுகம் செய்த, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை பாதுகாப்பாக இயக்கும் திட்டம் (புராஜெக்ட் ப்ரீடம்) ஒரு குறுகிய காலத்திற்கு நிறுத்திவைக்கப்படும்.

அமெரிக்க கப்பல்களை தாக்கினால் ஈரான் பூமியில் இருந்தே துடைத்தெறியப்படும்; ஹார்முஸ் ஜலந்தியில் சிக்கியுள்ள அமெரிக்க கப்பல்களை மீட்கும் நடவடிக்கைகளை தடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப் திட்டம் என்ன?




"புராஜெக்ட் ப்ரீடம்" என்பது ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வழிநடத்த உதவுவதற்காக டிரம்ப் அறிமுகப்படுத்திய ஒரு திட்டமாகும். உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு இன்றியமையாத இந்த முக்கிய கப்பல் வழித்தடத்தின் கட்டுப்பாடு தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து அமல்படுத்தும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தினார்.

Advertisement