அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்

19

சென்னை: தவெக அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெறமாட்டார்கள் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது: அமைச்சரவையில் இடம்பெறுமாறு ஆதவ் அழைப்பிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் கட்சியின் உயர்நிலை குழு 8ம் தேதி மாலை 6 மணிக்கு கூடியது. ஆன்லைன் கூட்டமாக நடைபெற்றது; 9 மணி அளவில் அது நிறைவுபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் அமைச்சரவையிலும் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தது அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும் நிறைவாக தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்ற உறுதியை தந்தார்கள். ஆட்சி அமைப்பதற்கு மட்டுமே தங்களது நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். பதவியேற்புக்கு பிறகு வேளச்சேரிக்கு வந்த விஜய் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதை இப்பொழுது மீண்டும் வெளிப்படையாக ஆதவ் வழிமொழிந்து இருக்கிறார். தவெக கூட்டணியில் இணைந்து நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. இன்னொரு கூட்டணி திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்தோம்.


அந்த கூட்டணியில் நாங்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று இருந்தோம். தவெக ஆட்சி அமைப்பதற்கு இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்பட்டதால் எங்களது ஆதரவை நல்கினோம். தற்போது வெளிப்படையாக தவெக முஸ்ஸிம் லீக், விசிக இடம்பெற வேண்டும் என்று விருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. அவர்களது அழைப்பை மதிக்கிறோம். நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். இது குறித்து கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்.


அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கான வாய்ப்பில்லை என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

விஜய் அழைப்பு; தவெக அரசில் விசிக சேருமா? திருமாவளவன் பேட்டி; தினமலர் யூடியூப், வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement