வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
மும்பை: அரசியலை விட நாட்டு நலனே முக்கியம் எனக்கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் , வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் சரத் பவார் பேசியதாவது: வெளிநாடுகளில் இந்தியாவின் உறுதி செய்யவும் பாதுகாக்கவும் பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். நம்மிடம் பல்வேறு வகையான அரசியல் கருத்து வேறுபாடுகள், பார்வைகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் கவுரவம் என வரும்போது, அரசியல் வேறுபாட்டை முன்னிறுத்தக்கூடாது.
நாட்டின் நலனை பாதுகாக்க வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும். பொதுவான நோக்கத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இந்திரா, நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் மத்தியில் ஆட்சி செய்த போது நாட்டின் எதிர்காலத்துக்காகவும், பெருமைக்காகவும் பணியாற்றினர். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் விமர்சனம்
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஐந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். இதனை விமர்சித்த ராகுல், சாமானிய மக்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் எனக்கூறிவிட்டு பிரதமர் மோடி உலகம் சுற்றி வருவதாக தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் தலைவர்களும் பிரதமரை விமர்சித்து இருந்தனர். இதற்கு பாஜ பதிலடி கொடுத்து இருந்தது. இந்நிலையில், சரத்பவாரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு புரியுது மோடிஜியை பற்றி. ஆனால் அந்த ராகுல், சோனியா, மமதா, ஸ்டாலின் போன்றவர்களுக்கு மோடிஜியின் பெருமை புரியவில்லையே...
வாஷிங்மெசின் நல்லா அழுக்கை வெளுக்குது போல
வெளிநாடுகளில் இந்தியாவின் கௌரவத்தையும் பெருமையையும் உயர்த்திய பெருமை திரு மோடி அவர்களே சேரும் காரணம் இதுவரை எத்தனையோ பிரதமர்கள் இருந்தார்கள் ஆனால் மோடியை போல் ஒரு பிரதமர் கூட இப்படி வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமையை வெளிநாட்டவர்கள் உயர்த்தி பேசுவது இந்தியர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பும் மரியாதையும் கிடைத்தது இந்த மோடி அவர்களால் தான்.
ஆனால் இதை ஒருபோதும் காங்கிரஸ் கட்சியும் அல்லது ராகுலோ யாருமே இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் காரணம் ராகுல் காந்திக்கு அந்த மன பக்குவம் கிடையாது அரசியலை விட நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று நினைப்பவர் திரு நரேந்திர மோடி ஆனால் இப்போது பிரதமர் மோடி அரசும் முறை பயணமாக ஐந்து நாடுகளுக்கு சென்றுள்ளார் இதை விமர்சித்து ராகுல் சாமான்ய மக்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு பிரதமர் இப்போது ஊர் சுற்றுகிறார் என்று ராகுல் காந்தி ஏளனமாக பேசுகிறார் வெளிநாடுகளுக்கு சாதாரண மக்கள் போவது வேறு ஒரு நாட்டின் பிரதமராக போவது வேறு என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் இது இரண்டும் ஒன்றல்ல மக்கள் செல்வது வேறு பிரதமர் செல்வது வேறு.
இவர் கட்சி மோடி கையியில்
நம்முடைய அந்நிய செலாவணியின் சேமிப்பை உத்தேசித்து வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் செல்வதைத் தவிருங்கள் என்றுதான் மோதி சொன்னார். தொழில் நிமித்தம் செல்வதை வேண்டாமென்று சொல்லவில்லை. இது நாடு தொழில் வளர்ச்சி அடைய முக்கியம். மோதி வெளிநாடுகளுக்கு செல்வது உல்லாசப்பயணம் அல்ல. இது ராகுல் போன்ற தற்குறிகளுக்கு விஷமக்காரர்களுக்கு தெரியாது
பிரதமர் இன் பயணத்திட்டம் 6 மாதம் முதல் 1 வருடம் க்கு முன்பு தயாரிக்க படுவது. நாட்டின் நலன் கருதி இந்த சுற்று பயணம் எல்லா அரசிலும் நடக்கும். ஒரு வித்தியாசம் இவர் தனியா செல்வார். மற்றவர்கள் குடும்பம் ஆக சென்று மக்கள் வரி பணம் வீணடிக்க படும். ஒரு நாட்டில் மட்டும் சுடலை மாதிரி 7 நாள் டேரா போடுவது இல்லை. வேளை வெட்டி இல்லாம எதிர் கட்சி தல மாதிரி யாருக்கும் தகவல் சொல்லாமல் ரகசியம் ஆக செல்வது இல்லை
தன கண் முன்னாலேயே கட்சி கற்பூரம் மாதிரி கரைவதை பார்த்துக்கொண்டிருக்கிறார் ... கருணாநிதிக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை ...ஸ்டாலினுக்காவது கிடைக்கும்
அந்த ஊர் கருணாநிதி.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கிகிறதோ . அய்யா அதற்கு அடிபோகிறாரோ
மராட்டிய சொல்லிடுச்சு .....மேலும்
-
உர மேலாண்மை விழிப்புணர்வு
-
பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் பயணிகள் கோரிக்கை
-
திருப்புத்துார் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
-
துாதையில் டிரான்ஸ்பார்மர் பழுது தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிப்பு
-
திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சருக்காக விதிமீறலா? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
-
வராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு