'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
சென்னை: போர்வாள் என்ற தமிழ் நாளிதழை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் துவங்கி உள்ளார்.
அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, 'நியூஸ் ஜெ' செய்தி சேனல், அதிமுகவுக்காக தொடங்கப்பட்டது. சேனல் நிர்வாகத்தை, முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி உள்ளிட்டோர் மேற்கொண்டனர். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, கட்சியும் இரண்டாக பிளவு பட்டுள்ளது.
சண்முகம், வேலுமணி தரப்பினரை, கட்சி பொறுப்புகளில் இருந்து அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் நீக்கி உள்ளார். இதையடுத்து, 'நியூஸ் ஜெ சேனல், எங்களுக்கு சொந்தமானது' என கூறிய சண்முகம், வேலுமணி தரப்பினர், இபிஎஸ் செய்திகளை புறக்கணித்ததோடு, அவருக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பினர். அதேபோல, நமது அம்மா நாளிதழும் இபிஎஸ் கையை விட்டு போய் விட்டது.
இபிஎஸ் பெயரில் வெளிவந்த நாளிதழ், சில நாட்களாக வேலுமணி பெயரில் வெளியாக துவங்கி விட்டது. இபிஎஸ்சை விமர்சனம் செய்தும் அதில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இன்று (மே 20) அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான போர்வாள் தமிழ் நாளிதழை கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
EPS ..BOREWELL summer special
Everyone cant win thru propaganda using printed and social media. Anyway, kets wish him good luck
11 னொரு முறை தோற்ற பிறகு போர்வாள் எதற்கு அண்ணாதிமுக்கவில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் காலில் விழுந்து சேர்த்து கொள்வதை விட்டு விட்டு ஏன் இந்த போர்வாள் இப்போது சுழற்றுவது வீன் ..
இது என்ன புது கூத்து ? கே.பி.முனுசாமி இருக்கும் வரை அதிமுக ஜெயிக்க வாய்ப்பில்லை. அவர் சென்ற பாராளும்னற தேர்தலில் எல்லா strategy க்களையும் சொதப்பி விட்டார்.
யாருக்காக இந்த செய்தித்தாள். யாராவது வாங்குகிறீர்களா. இதன் மூலம் கட்சி பணத்தை சுருட்டி சுயலாபம் சம்பாதிக்கவே இந்த செய்தித்தாள்
அதிமுகத் தொண்டர்கள் 25 பேர் செயலை ஏற்கமாட்டார்கள்.கட்சியை உடைக்க ஆதரவா?
இந்த போர்வாளை வைச்சு என்ன சாதிக்க போகிறார் இபிஎஸ்?
இப்படியே போனால் கழுதை தேய்ந்து. கட்டெறும்பான கதை தான்.
வேற்றுமைகளை களைந்து ஒன்றாக
நின்று அடுத்த தேர்தலில் அதிமுக
வெற்றி பெறுவதற்கான வழியை
யோசியுங்கள்.
11 தோல்வி இபிஎஸ் புதுசா நாளிதழ் வியாபாரம் ஆரம்பித்து விட்டார்?மேலும்
-
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறார் ராகுல்
-
பாதாள சாக்கடை பராமரிப்பு முக்கிய ரோடுகளில் தேவை
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயன்ற எம்எல்ஏ முஸ்தபா; பக்தர்கள் கொந்தளிப்பு
-
மூத்தோர் தடகளத்தில் அசத்தல் வீராங்கனைக்கு பாராட்டு
-
உலர் களம் இல்லாததால் சிக்கல் கல்லாபுரத்தில் கவலை
-
பைன் பாரஸ்ட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்