இலகு பணியில் இருந்த 3,000 பேர் வழக்கமான பணிக்கு திரும்பினர்
சென்னை: அரசு போக்குவரத்து கழகப் பணிமனைகளில், இலகு பணியில் இருந்த 3,000 பேர், ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில், தினமும் 20,000க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. 330 பணிமனைகளில், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்கல் பிரிவு பணியாளர்கள் என, 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவ ரீதியாக, உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டுப்பாட்டு அறை, டிக்கெட் பிரிவு, பணப்பிரிவு ஆகியவற்றில், இலகு பணிகளில் எப்போதும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருப்பர்.
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., மாறி மாறி, ஆட்சிக்கு வரும் போதெல் லாம், அந்த தொழிற்சங்கங் கள் போக்குவரத்து துறையில், பலமாக இருக்கும். அவர்களின் ஆதிக்கமும் அதிகமாக இருக்கும்.
அந்த நிலை தற்போது மாறிவிட்டது. புதிதாக த.வெ.க, ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3,000 ஊழியர்கள், மீண்டும் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு திரும்பியுள்ளனர்.
இது குறித்து, அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழகங்களில், 30 சதவீதம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், அரசு பஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, போக்கு வரத்து பணிமனையில், இலகு பணியில் இருந்தவர்கள், மீண்டும் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு திரும்பியுள்ளனர்.
எனவே, உண்மையாகவே இலகு பணி தேவைப்படு வோருக்கு, தொழிற்சங்கங் கள் பேதமின்றி, உரிய மருத்துவ சான்றிதழ் பெற்றுள்ளவர்களுக்கு, கட்டுப்பாட்டு அறை, டிக்கெட், கேஷ் ஷெக்சன் உள்ளிட்ட பிரிவுகளில் பணிகளை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எல்லா இடத்திலும் திராவிட மாடல். பொது துறை நிறுவனங்கள் திண்டுக்கல் போடும் நிலைக்கு செல்ல இது போல பல காரணங்கள்.
இலகு பணி என்பது கதை பேசும் பணி. ஊர் புரணி உலக புராணி பேசிக்கொண்டு அப்பப்போ வரும் பிரச்சனைகளை பெரிதாக்கி காசு பார்த்துக்கொண்டு பொழுதினை போக்கும் பணி.
உண்மை தான்
TVK ஆட்சிக்கு வந்ததன் advantage இப்ப தெரியுதா அரசு துறைகளில் ஆளுங்கட்சி union களின் கூட்டம் அடங்கிவிட்டது
TVK union will emerge soon
But இப்ப இல்லை
அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு இலவசங்கள்மட்டுமே காரணம் போன்றதொரு கருத்து இதுநாள்வரை கட்டமைக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு இப்பொழுதாவது மற்ற காரணங்களும் தெரியவருகின்றது. காவல்துறையில் ஆடர்லிமுறை இருப்பதை நீதிமன்றமே பலமுறை சுட்டிக்காட்டி அதை ஒழிக்கவேண்டுமென உத்தரவிட்டிருந்தது. மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் இவைகளும் ஊழலின் ஒரு ரகம்தான்.
அரசு போக்குவரத்து கழகங்களில் முதலில் தொழிற்சங்க செயல்பாடுகளை தடை செய்ய வேண்டும். தொழிற்சங்கம் என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டி மாடு மேய்க்கும் செயலுக்கு முடிவு கட்ட வேண்டும்மேலும்
-
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.... நவீனமயம்! கோடை கால சுற்றுலாவுக்கு புது ஏற்பாடு
-
முதல்வர் விஜய்க்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
-
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் அரசாணை வெளியீடு
-
போட்டியின்றி தேர்வாகும் சபாநாயகர்
-
பா.ம.க., சட்டசபை குழு தலைவராக சவுமியா தேர்வு
-
டெங்கு உற்பத்தியை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்