கட்சியை வளர்க்க பாருங்க: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சீறிய ராகுல்
- நமது நிருபர் -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'இனியாவது கட்சியை வளர்க்க பாருங்க' என, கோபாவேசமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக தமிழகம் வந்த ராகுல், சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
அங்கிருந்து, விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற ராகுல், பின்னர், தமிழக காங்., தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார்.
அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கிருந்து ஹோட்டலுக்கு திரும்பினார். ஹோட்டலில், காங்., முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அனைவரின் கருத்தை கேட்டறிந்த ராகுல், 'இனியாவது, தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாருங்க' என கோபமாக கூறிவிட்டு, டில்லி புறப்பட்டு சென்றார். இது கட்சி நிர்வாகிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, சத்தியமூர்த்தி பவனில், ராகுலுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, தமிழக காங்., முன்னாள் நிர்வாகி மயிலை அசோக்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'ராகுலை வரவேற்பதுகூட, ஒழுங்காக நடக்கவில்லை. இந்த குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'வெளி ஆட்கள் உள்ளே புகுந்து நெருக்கியதால், ராகுல் நிலை தடுமாறி உள்ளார். உரிய பாதுகாப்பு இல்லாததால், உடனே புறப்பட்டு விட்டார். பாதுகாப்பு குறைபாடு குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (16)
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
12 மே,2026 - 13:12 Report Abuse
தலைவர் பப்புவா இல்லை கார்கேவா 0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
12 மே,2026 - 12:47 Report Abuse
குழந்தைத்தனமான, தேசவிரோதம் , இந்துக்களை வெறுக்கும், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் ராகுல் காந்தி தலைமையில் 150 ஆண்டுகள் பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸின் இருக்கிறது. இது எவ்வளவு சோகமானது. குடும்ப அரசியல் குடும்ப ஆட்சி என்றைக்கு தொடராது. 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
12 மே,2026 - 11:57 Report Abuse
கட்சிக்கு பேரு வெச்சா போதுமா ?? அதுக்கு சோறு வைக்க வேணாமா ?? முதலில், நீங்கள் இந்தியர் எனில், இந்திய குடியுரிமை மட்டும் பெறுங்கள். பிறகு மற்றதை பார்க்கலாம். 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
12 மே,2026 - 11:41 Report Abuse
கட்சியை தொண்டர்கள் வளக்கணும். ஐயா தாய்லாந்து நேபால்னு டூர் போவாரு. காங்கிரஸ் மேலிடம் ஒரு வடிகட்டிய தத்தி. இவரால் தான் காங்கிரசுக்கு அடிமேல் அடி விழுது என்று தெரிந்தும் இவரை சுமப்பதுதான். காங்கிரஸ் கூட்டணி வைத்த சமாஜவாதி, RJD, NCP, சிவசேனா பால் தாக்ரே, திமுக, ஆம் ஆத்மி எல்லாம் காலி. விஜய் தெரிந்து கொண்டால் புத்திசாலி 0
0
Reply
Subramanian Suriyanarayanan - ,இந்தியா
12 மே,2026 - 11:09 Report Abuse
நீ இத்தாலிக்கே போயிரு சிவாஜி .... சாட்சி தானே வளரும் 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
12 மே,2026 - 09:21 Report Abuse
நீங்களே ஒப்புக்கிட்டீங்க, கட்சியை வளர்ப்பதில் உங்களுக்கும் பங்கு இருக்கு ராகுல் . எப்பப்பாரு மோடியையும், மத்திய அரசையும் குறை கூறி கொண்டே இருப்பதை தவிர்த்து, உங்கள் கட்சியை வளர்ப்பதில் நீங்களும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். 0
0
Reply
அன்பே சிவம் - ,
12 மே,2026 - 08:01 Report Abuse
1). ராகுல் தவறான அறிவுரை வழங்கி உள்ளார்.
2). தேசியம் சார்ந்த சிந்தனை மற்றும் நாட்டுப்பற்று தற்போதைய காங்கிரஸுக்கு வளர்ந்ததாலே கட்சி ஆட்டோமேட்டிககாக ராக்கெட் வேகத்தில் வளரும்.
3). கூடவே மக்களை மொழி இனம் மதம் சாதி என பிரித்து ஆளும் வேலைகளை காங்கிரஸ் நிறுத்தினால் கட்சி சட சட என்று வளரும்.
4). அதற்கு நல்ல தலைவர்கள் தேவை. கண்டிப்பாக ராகுலிடம் அந்த தேசியம் சார்ந்த தலைமை பண்பு சுத்தமாக இல்லை. எனவே கட்சி வளர போவது இல்லை. 0
0
Reply
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
12 மே,2026 - 07:53 Report Abuse
இதுவே உதாரணம். காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது 0
0
Reply
xyzabc - ,இந்தியா
12 மே,2026 - 06:54 Report Abuse
Right message 0
0
Reply
sundararajan - bangalore,இந்தியா
12 மே,2026 - 06:30 Report Abuse
இது இருக்கட்டும் ஸாரே கேரள முதல்வர் வேட்டி கீழே உள்ளது.யார் எடுத்து கட்டிக் கொள்ள வேண்டும். 0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
விளைநிலம் எடுப்பிற்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: விவசாயிகள் கலெக்டரிம் மனு
-
வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை உறுதி செய்ய ஓ.டி.பி., கேட்பதால் தயக்கம்
-
திருப்புத்துார் வழிபாட்டு தலம் அருகில் மதுக்கடை அதிகாரிகள் அகற்றுவார்களா: பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
ஆதனுார் கிராமத்தில் ரோட்டில் ஓடும் கழிவு நீரால் மக்கள் அவதி
-
கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்னை வரக்கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
-
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு; முயற்சி வெற்றி பெறணும் என்கிறார் ஸ்டாலின்
Advertisement
Advertisement