ஸ்கேட்டிங் போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடைகால ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி பரிசு வழங்கினார்.

விழாவில் முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

Advertisement