பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு வரை ஒரே பதவி தானா? கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வேதனை
மதுரை: பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை ஒரே பதவியில் வேலை செய்வதால் பதவி உயர்வு வேண்டும் என தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது குறித்து சங்கத்தினர் முதல்வர் விஜயிடம் வைத்துள்ள கோரிக்கை: கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளில் உதவி டாக்டர்கள், டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் என பல்வேறு நிலைகளில் பணியில் உள்ளோம். 20 வயதில் கால்நடை பராமரிப்பு உதவியாளராக பணியில் சேர்ந்தவர்கள் 60 வயதில் அதே பதவியில் தான் ஓய்வு பெறுகிறோம்.
எங்கள் துறையில் உள்ள மற்ற பிரிவினருக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. கால்நடை உதவி டாக்டர் தொடர் பதவி உயர்வு பெற்று கூடுதல் இயக்குனராகின்றனர். கால்நடை ஆய்வாளர்கள் நிலை இரண்டு, ஒன்று, அடுத்தது முதுநிலை மேற்பார்வையாளர் என பதவி உயர்வு பெறுகின்றனர்.
வருவாய்த் துறையில் தலையாரியாக பணியில் சேருபவர்கள் ஓய்வு பெறுவதற்குள் துணை தாசில்தார் அந்தஸ்து வரை பதவி உயர்வு பெறுகின்றனர். அனைத்து அரசுத் துறைகளிலும் சாதாரண அலுவலக உதவியாளராக பணிபுரிபவர்கள் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வுடன் ஓய்வுபெறுகின்றனர்.
பதவி உயர்வே இல்லாத ஒரே பணியிடம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி தான்.எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் இருந்து கடந்த ஆட்சி வரை பதவி உயர்வு கோரிக்கை வைத்து வருகிறோம். தீர்வு கிடைக்கவில்லை. முதல்வர் விஜய், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மீது கருணை காட்டி பத்தாண்டுக்கு ஒருமுறையாவது பதவி உயர்வு என்கிற அரசாணையை வெளியிட வேண்டும் என்றனர்.
இவர்கள் குவாலிஃபிகேஷனுக்கு டாக்டர் வேலையா கொடுக்கணும்
அரசு வேலை பணிச்சுமை கிடையாது நல்ல சம்பளம் எவ்வளவு கிடைத்தாலும் மனிதர்களுக்கு திருப்தி இருக்காது பி. டெக், M.tech, முடித்து விட்டு ஐந்து வருடங்களாக ஐயாயிரம் வாங்க அவனவன் அல்லாடுறான்
நிறைய எம் டெக் பட்டதாரிகள் விருப்பப்பட்டு விண்ணப்பித்த பணியிடம்.