ஏழரை கேள்விகள்!
'மது அருந்துவதை குறைக்க படிப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனும் வாக்குறுதிக்கும், '717 மதுக்கடைகளை மூட நடவடிக்கை' எனும் செய்திக்கும் உள்ள தொடர்பு பற்றி, சிந்தித்து சிலாகிக்கும் 'அறிவார்ந்த' தமிழக மக்கள், வசீகர தமிழக முதல்வரிடம் கேட்கும் சில கேள்விகள்...
1 எதிர்க்கட்சி தலைவருக்கான அறிக்கையில், 'மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் த.வெ.க., உறுதியாய் இருக்கிறது' என குறிப்பிட்ட முதல்வரே... உதயநிதியின் 'சனாதன ஒழிப்பு' கருத்தை புதைக்கும் தங்களது எதிர்கருத்தை எப்போது எதிர்பார்க்கலாம்?
2 ஆட்சியில் எந் த குறை சொன்னாலும், 'முந்தைய ஆட்சி செய்து வைத்த அலங்கோலம்தான் காரணம்' என தமிழக முதல்வர்கள் சொல்வது வழக்கம்; நீங்களும் உங்கள் அமைச்சர்களும் இப்படி நா சுழற்ற மாட்டீர்கள் என நம்பலாமா?
3 அறுபது ஆண்டு காலமாக இரு திராவிட கட்சிகளின் நிர்வாகத்திற்கு பழகிய அரசு அதிகாரிகள், உங்களின் நிர்வாக முயற்சிக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க மறுத்தால், மக்கள் மன்றத்தில் அதை வெளிப்படையாக சொல்வீர்களா?
4 'விசில்' புரட்சி செய்திருக்கும் எளிய மக்கள், 'தலைகவசம் அணியாததற்கு அபராதம் சரி; தரமான சாலை எங்கே' என போக்குவரத்து காவலரிடம் இனி கேட்டால், 'போய் அரசிடம் கேள் ' எனும் அர்த்தமற்ற பதில் வராதுதானே?
5 'பெரும் வருமானம், வசதியான வாழ்க்கை துறந்து உங்களுக்காக வந்திருக்கிறேன்' என பிரசாரத்தில் சொன்ன எங்கள் விஜய், 'அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர்' எனும் அடையாளம் பெறும் வாய்ப்புண்டா?
6 அதிதீவிர களையெடுப்பு நடத்தி, 'என் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழக காவல் துறையில், 'நேர்மையற்றவர்கள்' என யாரும் இல்லை' எனும் உத்தரவாதம் தர, தங்களுக்கு எத்தனை நாள் அவகாசம் தேவைப்படும் முதல்வரே?
7 'என்று தணியும் இந்த சினிமா மோகம்' என்பது எப்போதையும் விட தற்போது தமிழக மக்கள் மனதில் ததும்பி நிற்கும் பெரும் ஏக்கம்; மக்கள் முதல்வராக இம்மோகம் களைய தாங்கள் எடுக்க விருக்கும் நடவடிக்கை என்ன?
7 ½ லஞ்சம் ஒழிக்கப்படும் தே தி?
71/2 ஏழரை சரியான நெத்தி அடி.
நேர்மையான அதிகாரிகள் தண்டிக்கப்படுகின்றனர் காரணம் அவரது மேல் அதிகாரிகள் அவருடைய கீழ் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் லஞ்சம் ஊழல்களில் ஊறியவர்கள். ஒரு விஜிலன்ஸ் அதிகாரி என்னிடம் கூறியது. அவர் டிராப் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் புகார் அளித்தவர் உடன் சென்று லஞ்ச பணத்தை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்க என அதற்கு அந்த அதிகாரி சொன்னது இது நீ எங்க வேணா போயிக்க கேட்ட லஞ்ச பணத்தை தரவில்லை என்றால் உன் காரியம் நடக்காது என. அப்புறம் என்ன டிராப்தான். இதுபோல டிராப்ல பிடிபட்ட மூன்று பேர்கள நீதிமன்றம் விடுவித்து விட்டது. ஒரு கேஸ் ரசாயன பவுடர் கையில் இருந்தது ரூவா நோட்ல கைரேகை இருந்தது ஆதாரம் இல்லை என இரண்டாவது அவர் வீட்ல ரூவா தந்தது அதெப்படி லஞ்சம் ஆகும் என மூனாவது இரண்டு முறை FIR போட்டது செல்லாது என. இப்படி நீதிமன்றங்கள் லஞ்ச பேர்வழிகளை தண்டிக்காதவரை குற்றவாளிகளுக்கு கொண்டாட்டமே
ஆண்டுக்கு இருநூறு கோடி சினிமா வருமானத்தை தியாகம் செய்துவிட்டு லாட்டரி உதவியுடன் அரசியலுக்கு வந்தது சேவைக்காகவா?.
Yesterday I travelled by car to Namakkal. 6 to 7 restaurants got closed due to shortage of Gas. CNG for car was not available until noon. Fortunately vertica can run by petrol
என்ன அபத்தமான கேள்விகள்?.
அரசாங்கமே இப்ப தான் பிறந்து இருக்கு..
இது ஒன்றும் அபத்தமில்லை. மிகவும் கண்ணியமாக, அக்கறை கொண்ட கேள்விகள். Yes, it is a new government. உரிய காலத்தில் பதில் அளிக்கலாம் அதிலும் சனாதனம் பற்றிய கேள்விக்கு அவகாசம் தேவையில்லை. தினமலர் பொறுப்பான நான்காம் தூணாக செயல் படுவதை பாராட்ட மனமில்லையானாலும் வெறுப்பை உமிழ வேண்டாமே
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். 7-3/4:மேலும்
-
புயலுக்கு முன் அமைதி: ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பற்றி டிரம்ப் சூசகம்
-
சிங்கப்பூரில் அனுமதியின்றி பழம் பறித்தால் ரூ.3.5 லட்சம் அபராதம்: கீழே கிடப்பதை எடுத்தாலும் சிக்கல்!
-
'செல்பி எடுத்துக்கொள்கிறது மரம்'
-
அதிமுகவை இழுத்து பா.ஜ.,வுக்கு 'செக்'; அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி
-
பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு வரை ஒரே பதவி தானா? கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வேதனை
-
ஓய்விற்கு பின் பதவி உயர்வு கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு