இலவச பயிற்சி முகாம் நிறைவு

மேலுார்: மேலுார் அரசு இருபாலர் பள்ளியில் சாம்பியன்ஸ் அகாடமி சார்பில் கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி நடந்தது. 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். யோகா, வாலிபால், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் குறித்து வீரபாண்டி, பசுபதி, உஷா உட்பட 14க்கும் மேற்பட்டோர் பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு இலவச டி சர்ட், சான்றிதழ், பதக்கம், இயற்கை உணவு வழங்கிய சமூக ஆர்வலர்கள் முரளி, ராமச்சந்திரன், சுப்பையா, உஸ்மான் ஆகியோர் நிறைவு விழாவில் பாராட்டப்பட்டனர்.

Advertisement