மனைவியை தாக்கிய கணவர், மாமனார் கைது
தரமணி, மே 17–
குடும்ப தகராறில், மனைவியை தாக்கிய கணவர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஓ.எம்.ஆர்., – எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பை சேர்ந்த மணிகண்டன் மனைவி பூர்ணிமா, 35. தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், பூர்ணிமா, சில மாதங்களாக கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தரமணி, கானகம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.
இரு தினங்களுக்கு முன், கணவர் வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க, தன் தாயுடன் பூர்ணிமா சென்றார். அப்போது, மணிகண்டன் மற்றும் அவரது தந்தை அசோக்குமார் ஆகியோர், பொருட்களை எடுக்கவிடாமல் தடுத்து, இருவரையும் தரக்குறைவாக பேசி கையால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புகாரின்பேரில், தரமணி போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டன், 39, அசோக்குமார், 65, ஆகியோரை கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
'செல்பி எடுத்துக்கொள்கிறது மரம்'
-
ஏழரை கேள்விகள்!
-
அதிமுகவை இழுத்து பா.ஜ.,வுக்கு 'செக்'; அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி
-
பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு வரை ஒரே பதவி தானா? கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வேதனை
-
ஓய்விற்கு பின் பதவி உயர்வு கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கோவில்களுக்கான எதிர்கால திட்டம் என்ன? முதல்வர் விஜய்க்கு ஹிந்து முன்னணி கேள்வி