சாலையை கடக்க முயன்ற நபர் கார் மோதி பலி

செங்கல்பட்டு, மே 17-–

செங்கல்பட்டு அணுகு சாலையை கடக்க முயன்ற நபர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரகுப்பத்தைச் சேர்ந்தவர் பாபு, 45. இவர் தன் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் செங்கல்பட்டு வந்தார்.

நிகழ்ச்சி முடிந்த நிலையில், மீண்டும் சொந்த ஊர் செல்ல செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலம் அருகில் உள்ள நிழற்குடையில் பேருந்திற்காக காத்திருந்தார்.

நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால், மேம்பாலத்தில் பேருந்துகள் நின்று செல்லும் என அங்கிருந்தோர் கூறியுள்ளனர். இதையடுத்து மேம்பாலம் நோக்கி அணுகு சாலையில் நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ‘ஹோன்டாய்’ கார் பாபு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செங்கல்பட்டு நகர போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement