கங்கையம்மனுக்கு வரும் 29ல் கோடை உத்சவம் தொடக்கம்
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில், கங்கையம்மனுக்கு கோடை உத்சவம் வரும் 29ம் தேதி தொடங்குகிறது
சின்ன காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில், கங்கையம்மனுக்கு ஆண்டுதோறும் நான்கு நாட்கள் கோடை உத்சவம் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் வரும் 29ம் தேதி, மாலை 5:00 மணிக்கு மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், இரண்டாம் நாளான வரும் 30ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஜலம் திரட்டுதலும், இரவு 12:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.
மூன்றாம் நாளான வரும் 31ம் தேதி மதியம் 1:30 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படையலிடப்படுகிறது.
விழா நிறைவு நாளான ஜூன் 1ம் தேதி மதியம் 12:00 மணிக்கு கஞ்சி வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
மேலும்
-
'செல்பி எடுத்துக்கொள்கிறது மரம்'
-
ஏழரை கேள்விகள்!
-
அதிமுகவை இழுத்து பா.ஜ.,வுக்கு 'செக்'; அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி
-
பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு வரை ஒரே பதவி தானா? கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வேதனை
-
ஓய்விற்கு பின் பதவி உயர்வு கோர முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கோவில்களுக்கான எதிர்கால திட்டம் என்ன? முதல்வர் விஜய்க்கு ஹிந்து முன்னணி கேள்வி