தனியார் பள்ளி பஸ்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

தர்மபுரி:தர்மபுரியில் தனியார் பள்ளிகளின், 276 பஸ்களை, மாவட்ட கலெக்டர் சதீஷ் ஆய்வு- செய்து, விதிகளை பின்பற்றாத, 6 பஸ்-களை, 7 நாளில் சரிசெய்ய அறிவுறுத்தினார்.


தமிழகம் முழுவதும் ஜூன் மாதம், பள்ளி கல்லுாரிகள் திறக்கப்-பட உள்ளன. பள்ளி திறப்பை முன்னிட்டு, தமிழக அரசு பல்-வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தர்மபுரி புதிய கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள மைதானத்தில், தர்மபுரி மற்றும் பாலக்கோடு பகுதிகளை சேர்ந்த தனியார் பள்ளிகளின், 276 பஸ்களின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று ஆய்வு செய்தார். இதில், பஸ்களில் முதலுதவி பெட்டி, அவசர-கால கதவு, ஜி.பி.ஆர்.எஸ்., கருவி, தீயணைப்பு கருவிகள், 'சிசி-டிவி' கேமரா உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். கவன-குறைவான செயல்பாடு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து டிரைவர் மற்றும் கிளினர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தீ விபத்து ஏற்படும்போது, தீயை அணைக்க தீயணைப்பானை பயன்-படுத்தும் முறை குறித்து கற்றுக்கொள்ள டிரைவர்களுக்கு அறிவு-றுத்தினார். இந்த ஆய்வின்போது, குறைபாடுகள் கண்டறிய-ப்பட்ட, 6 பஸ்களை, 7 நாளில் சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார். இதில், மாவட்ட
எஸ்.பி., மகேஷ்வரன், ஆர்.டி.ஓ., ஜெயதேவ்ராஜ், பிரேக் இன்ஸ்-பெக்டர்கள் தரணிதரன், ராஜேஷ்கண்ணா ஆகியோர்
உடனிருந்தனர்.

Advertisement