புயலுக்கு முன் அமைதி: ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பற்றி டிரம்ப் சூசகம்
வாஷிங்டன்: ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
அணுசக்தி திட்டம் காரணமாக மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வரும் நிலையில், அமைதி பேச்சுக்காக தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனை விதிப்பதும், அதை ஏற்க மறுப்பதும் தொடர்வதால் அமைதி பேச்சில் இழுபறி நீடிக்கிறது. தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் தோல்வியுற்றால், ஈரானுக்கு எதிராக மீண்டும் ராணுவ நடவடிக்கை தொடங்க அமெரிக்கா பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தில், கொந்தளிப்பான கடலில் பயணிக்கும் போர்க் கப்பல்களுக்கு முன்னால் நின்றுகொண்டு, டிரம்ப் கேமராவை நோக்கி சுட்டிக்காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அந்த வரைபடத்தில் உள்ள பல கப்பல்களில் ஈரானியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அதனுடன் "புயலுக்கு முந்தைய அமைதி" என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. மேலும், புயல் வீசும் கடல் மற்றும் ராணுவக் கப்பல்களின் பின்னணியில், டிரம்புக்கு அருகில் ஒரு அமெரிக்கக் கடற்படைத் தளபதி நிற்பது போலவும் அந்த வரைபடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவு பேசும் பொருளாகி உள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர், "எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானின் ராணுவம் தயாராக உள்ளது.
அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். தவறான உத்தியும் தவறான முடிவுகளும் எப்போதும் தவறான விளைவுகளுக்கே வழிவகுக்கும். இதை முழு உலகமும் ஏற்கனவே உணர்ந்துவிட்டது'' என தெரிவித்துள்ளார்.
Someone must teach usa a lesson, then only they will realise the pain of war and destruction, for all they donis sit comfortably in their isolated continent and launch missiles into other countries from military bases in nations of overseas allies
உலகின் காட்டுமிராண்டிகளை அடாவடிகளை ரவுடிகளை முன்மாதிரியாக பேசிக்கொண்டு உயர்வாக பேசிக்கொண்டு திரியும் மூளையற்ற இந்தியர்களே அரசு ஊழியர்களை அரசுத்துறைகளை என்னவென்று சொல்வது இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததே வீண்
யாரை மனதில் ?
பிஜேபி யாராய் ஆதரிக்கிறது இரண்டு பக்கம் மத்தலாமா இல்லை ஒரு அணியை ஆதரிக்கிறதா
அப்பாவி மக்கள் குழந்தைகளை ஈவிறக்கமின்றி கொல்லுவது தவறு
ஈரான், பாகிஸ்தான் போன்ற மத உணர்வுகள் அதிகம் தூண்டும், ராணுவ கட்டுப்பாடு இல்லாத ஆக்கிரமிப்பு நாடுகளிடம் ஒரு போதும் அணு ஆயுதம் கூடாது.
ஐரோப்பி நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழையாமை கஷ்டம் தரும். டிரம்ப் மன உறுதியின்றி மாறும் போர் யுக்தி தோல்வி தரும்.
கஷ்டபட்டு உருவாக்கிய பாரசீக, இந்திய மக்களை விரட்டி அடித்து ஆக்கிரமித்த ஈரான் பாகிஸ்தான் நாடுகள் நில உரிமை உரியவர்களுக்கு செல்ல வேண்டும். இதில் அமெரிக்கா போர் புரிந்து உறுதி செய்ய வேண்டும்.மேலும்
-
இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்த தவெக; சொல்கிறார் ஸ்டாலின்
-
கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்பு; 20 அமைச்சர்களும் பொறுப்பேற்பு
-
ஊட்டியில் துவங்கியது மலர் கண்காட்சி
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்