மார்ச் மாத மின் கட்டணமே செலுத்தலாம்

கருமத்தம்பட்டி: காடுவெட்டி பாளையம் பிரிவுக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம், குளத்துப் பாளையம் மின் நுகர்வோர்கள், கடந்த மார்ச் மாத மின் கட்டணத்தையே செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சோமனுார் கோட்ட செயற்பொறியாளர் மருதாசலம் அறிக்கை :

காடுவெட்டிபாளையம் பிரிவுக்கு உட்பட்ட கிட்டாம் பாளையம், குளத்துப் பாளையம், பி.எஸ்.எப்., முகாம் பகுதிகளில், நிர்வாக காரணங்களால், மே மாதத்துக்கான மின் கட்டண கணக்கீடு மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. அதனால், கிட்டாம் பாளையம், குளத்துப்பாளையம், பி.எஸ்.எப்., முகாம் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள், கடந்த மார்ச் மாதத்திய மின் கட்டணத்தையே செலுத்த வேண்டும். கணக்கீடு செய்யும் தேதியை கருத்தில் கொண்டு,20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டுகிறோம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது .

Advertisement