கஞ்சா, புகையிலை விற்ற இரண்டு பேர் கைது
காஞ்சிபுரம்:கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்ற இரண்டு பேரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன், 29. இவர், நேற்று பி.டி.லீ., செங்கல்வராய நாயக்கர் ஐ.டி.ஐ., அருகே கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருப்பதாக, பாலுச்செட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த மதிவாணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஒலிமுகமதுபேட்டை பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சிறுகாவேரிபாக்கம் நெட்டேரி பகுதியைச் சேர்ந்த துரை, 65, என்பவரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'குடி'மகன்கள் அட்டகாசம் எம்.எல்.ஏ.,விடம் மக்கள் புகார்
-
எதிர்பார்ப்புகள் இல்லாததே உண்மையான சேவை 'வாழும் கலை' நிறுவனர் ரவிசங்கர் குருஜி பேச்சு
-
மாநில செஸ் போட்டியில் சென்னை கவின், திருச்சி பவித்ரா அணிகள் சாம்பியன்
-
பாதிப்பில்லாத இடத்தில் சிப்காட் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., தகவல்
-
மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
-
டூவீலர் திருட்டு போலீசில் புகார்
Advertisement
Advertisement