வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 பேர் பலி
காஞ்சிபுரம்:வெவ்வேறு இடங்களில், நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.
அரக்கோணம் அடுத்த, முருங்கை கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் சந்தோஷ், 14. இவர், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் அடுத்த, நாகப்பட்டு கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன் தினம் கிணற்றில் குத்தித்த போது, நீரில் மூழ்கி இறந்தார்.
தகவல் அறிந்த, பொன்னேரிக்கரை போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
* காஞ்சிபுரம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 42. இவர் நேற்று முன்தினம் செவிலிமேடு பகுதி குளத்தில் குளிக்கும் போது, நீரில் மூழ்கி இறந்ததாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement