இரு சுரங்கப்பாதை பணிகள் இழுத்தடிப்பு திருவொற்றியூர்மேற்கு பகுதி மக்கள் தவிப்பு
திருவொற்றியூர்: இரண்டு சுரங்கப்பாதை பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்கள், போக்குவரத்து வசதிக்காக தவிக்கும் சூழல் உள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்தில், 4, 6, 7 ஆகிய வார்டுகளை உள்ளடக்கியது மேற்கு பகுதி. இதில், ஆறாவது வார்டின், அம்பேத்கர் நகர், ராஜா சண்முகம் நகர், சரஸ்வதி நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அம்பேத்கர் நகர் – மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையை பயன்படுத்தி, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு சென்று வருகின்றனர்.
சுரங்கப்பாதை குறுகலாக இருப்பதால், 4, 6, 7 ஆகிய வார்டுகளின் ஒட்டுமொத்த பள்ளி, கல்லுாரி மாணவர்களும், கல்வி நிலையங்களுக்கு, அம்பேத்கர் நகர் – மாணிக்கம் நகர் இணைப்பு சுரங்கப்பாதை வழியாகவே படையெடுக்கின்றனர்.
இதனால், காலை – மாலை வேளைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சுரங்கப்பாதை கட்டி, 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், ஆங்காங்கே கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, பலவீனமாக காட்சியளிக்கிறது.
இதற்கு தீர்வாக, 2022ம் ஆண்டு, 30 கோடி ரூபாய் செலவில், 30 அடி அகலத்தில் இருவழித்தடம், அணுகு சாலை வசதிகளுடன், 13.5 அடி உயரத்திற்கு, புதிய சுரங்க பாதை கட்டமைக்கும் பணி துவங்கியது. மண் சரிவு உள்ளிட்ட பிரச்னைகளால், நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், 10 சதவீதம் பணிகள் கூட நடக்கவில்லை.
அதே போல், நான்காவது வார்டில் விம்கோ நகர் ரயில்வே கேட்டை கடந்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு சென்று மக்கள் வந்தனர். இதனால், ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வந்தது.
இதற்கு தீர்வாக, 25.09 கோடி ரூபாய் செலவில், 24.75 அடி அகலம், 1,128 அடி நீளம் கொண்ட சுரங்கபாதை அமைக்கும் பணிகள், 2024ல் துவங்கியது. ரயில்வே தண்டவாளத்திற்கு கீழ், 155 அடி துார பணிகள் மின்னல் வேகத்தில் முடிந்தன.
ஆனால், ஜோதி நகர் பக்கம் 495 அடி நீளம்; திருவொற்றியூர் நெடுஞ்சாலை பக்கம் 475 அடி நீளம் சுரங்கப்பாதை பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. இறந்தவர்களின் உடல்களை கூட ஊர்வலமாக சுடுகாடு கொண்டு செல்வதில், பல இன்னல்களை சந்திப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அண்ணாமலை நகர் மற்றும் விம்கோ நகர் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த சுரங்கப்பாதை வேலைகள் பாலப் பணிகள் சுணங்கள் விடாமல் அதிரடியாக செய்து முடிக்க வேண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு அது வரவேண்டும் புதிய முதலமைச்சர் அவர்கள் இதற்கு என்ன பணம் என்ன இதுக்கு தேவையானதை பூர்த்தி செய்ய வேண்டும் நன்றிமேலும்
-
நார்டிக் கூட்டமைப்பு மாநாடு; ஐந்து நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சு
-
அசந்து துாங்கிய இளம்பெண் 5 சவரன் நகை பறிப்பு
-
நீதிபதிக்கு எதிராக அவதுாறு ‘மாஜி’ முதல்வருக்கு நோட்டீஸ்
-
சிக்னல் இயக்க நடவடிக்கை தேவை
-
பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-
உயர்திரு வெங்கடேஷ் சார் விருப்பம் தினமலர் பவளவிழா வாழ்த்து