பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலைய வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை, தியாகதுருகம் சாலை என இரு சாலைகளையும் ஒட்டியவாறு பஸ் நிலையம் உள்ளது. தற்போது புறநகரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டதனால், இந்த பஸ் நிலையம் டவுன் பஸ்களுக்காக இயங்கி வருகிறது.

இந்த பஸ் நிலையத்தின் உட்புகும் வழி மற்றும் வெளியேறும் வழி இரண்டிலும் பூ, பழ, கீரைகள் விற்கும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளால் உள்ளது.

இதனால் வழிகள் சுருங்கி, பஸ்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement